Home /local-news /

இராமநாதபுரம்: வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்கள் - போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை

இராமநாதபுரம்: வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்கள் - போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை

வாகனங்களில் காற்று ஒலிப்பான் கருவியில் இருந்து அதிகபட்சம் 90 டெசிபிள் அளவு மட்டுமே ஒலி எழுப்ப வேண்டும். அதற்கு மேல் கூடுதலாக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பயன்படுத்த தடை உள்ளது

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இயக்கப்படும் வாகனங்களில் அதிக அளவு ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    அதிக ஒலி எழுப்புவதால் முதியவர்கள் மற்றும் மருத்துவ சிகிச்சை பெறுவோர்கள் அதிக பாதிப்பை சந்தித்து வருவதாக வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

    வாகனங்களில் காற்று ஒலிப்பான் கருவியில் இருந்து அதிகபட்சம் 90 டெசிபிள் அளவு மட்டுமே ஒலி எழுப்ப வேண்டும். அதற்கு மேல் கூடுதலாக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பயன்படுத்த தடை உள்ளது. ஆனால், அதனை பலரும் மீறி வருகின்றனர்.

    ஒலி மற்றும் காற்று மாசு ஏற்படுத்தியதாக 2021ல் 400-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    எனவே, இது போல் ஒலி மாசு, காற்று மாசு ஏற்படுத்தும் வாகனங்கள் மீது போக்குவரத்து காவல்துறையினர் சார்பில் அபராதம் விதிப்பதோடு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

    செய்தியாளர்:பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Ramanathapuram, Transport

    அடுத்த செய்தி