Home /local-news /

சிசிடிவி காட்சியை வெளியிட்டு பைக் திருடனை தேடும் கமுதி போலீசார்..

சிசிடிவி காட்சியை வெளியிட்டு பைக் திருடனை தேடும் கமுதி போலீசார்..

இருசக்கர

இருசக்கர வாகனம் திருடும் சிசிடிவி காட்சி கொண்டு விசாரணை

Ramanathapuram District | ராமநாதபுரம் மாவட்டம் கமுதி குண்டாறு திரும்பும் தெருவில் நேற்று இரவு தனியார் சோலார் நிறுவனத்தில் பணியாற்றும் அசோக்ராஜ் என்பவர் தன் வீட்டு முன்பாக தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி உள்ளார்.

    கமுதியில் இருசக்கர வாகனத்தை திருடும் மர்ம நபரின் CCTV கேமரா காட்சிகள் வெளியாகி உள்ளது. இதை கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி குண்டாறு திரும்பும் தெருவில் நேற்று இரவு தனியார் சோலார் நிறுவனத்தில் பணியாற்றும் அசோக்ராஜ் என்பவர் தன் வீட்டு முன்பாக தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி உள்ளார்.

    இதையடுத்து, அவரின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை , இரவு 12.30 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார். காலையில் எழுந்து பார்த்த அசோக்ராஜ் தன் வீட்டின் முன் நின்றிருந்த தனது இரு சக்கர வாகனத்தை காணவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இதையடுத்து, கமுதி காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.

    இந்நிலையில் கமுதி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருசக்கர வாகனத்தை திருடியவரை தேடி வந்துள்ளனர்.

    அப்போது அங்கே உள்ள ஒரு கடையில் உள்ள சிசிடிவியை கேமராவை பரிசோதித்து பார்க்கும் பொழுது இரு சக்கர வாகனத்தை திருடி செல்வது தெளிவாக தெரிந்துள்ளது. இதையடுத்து வாகனத்தை திருடிச் சென்ற குற்றவாளியை காவல்துறையினர் கண்டறிந்தனர்.

    இந்நிலையில், வாகனத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சியை வெளிவிட்டு கமுதி காவல்துறையினர் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

    செய்தியாளர்:பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: CCTV, CCTV Footage, Ramanathapuram

    அடுத்த செய்தி