Home /local-news /

ரவுடியை பிடிக்க சென்ற போலீஸ் எஸ்ஐ மற்றும் தலைமைக் காவலருக்கு அரிவாள் வெட்டு

ரவுடியை பிடிக்க சென்ற போலீஸ் எஸ்ஐ மற்றும் தலைமைக் காவலருக்கு அரிவாள் வெட்டு

ரவுடியை பிடிக்க சென்ற காவலர்களுக்கு– அரிவாள் வெட்டு

ரவுடியை பிடிக்க சென்ற காவலர்களுக்கு– அரிவாள் வெட்டு

Ramanathapuram District | கமுதி அருகே ரவுடியை பிடிக்க முயன்ற எஸ்ஐ மற்றும் தலைமைக் காவலருக்கு  அரிவாள் வெட்டு, கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    கமுதி அருகே ரவுடியை பிடிக்க முயன்ற எஸ்ஐ மற்றும் தலைமைக் காவலருக்கு அரிவாள் வெட்டு, கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மூக்கையூர் துறைமுக கடற்கரை பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அருப்புக்கோட்டை அடுத்துள்ள பாளையம்பட்டியை சேர்ந்த காதலர்களை மிரட்டி நகை, செல்போன் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு, பாலியல் தொந்தரவு செய்துள்ளனர்.

    இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் குற்றாவாளிகள் மீது கமுதி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் அவர்களை விசாரித்து தேடி வந்துள்ளனர்.

    இதையடுத்து, விசாரணையில் கமுதி அடுத்துள்ள கே.வேப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பத்மேஸ்வரன், தினேஷ்குமார் என்று தெரியவந்துள்ளது.

    வேப்பங்குளம் அருகே இருவரையும் போலீசார் விரட்டி பிடிக்க முயற்சித்த போது, ராமநாதபுரம் தீவிர குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன், தலைமை காவலர் கருப்பசாமி உள்ளிட்டோரை தாக்கிவிட்டு தப்பிக்க முயற்சி செய்தனர்.

    காவல்துறையினர் மற்றும் ரவுடிகள் இடையே ஏற்பட்ட கடுமையான மோதலின் இருதரப்பினருக்கும் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. ரவுடிகளை போலீசார் வளைத்து பிடித்துள்ளனர். மேலும், காவல்துறையினர் மற்றும் இரண்டு ரவுடிகளும் கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    கைது செய்யப்பட்டள்ள இவர்கள் இருவரின் மீதும் ஏற்கனவே பல்வேறு வழிப்பறி மற்றும் குற்ற வழக்குகள் இருப்பதாக காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டள்ளது.

    இது குறித்து, ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை துணைத்தலைவர் மயில்வாகனன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் உள்ளிட்டோர் கமுதி அரசு மருத்துவமனையில் இருவரிடமும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி