Home /local-news /

பரமக்குடியில் 340 கிலோ புகையிலைப்பொருட்கள் பறிமுதல் - போலீசார் அதிரடி

பரமக்குடியில் 340 கிலோ புகையிலைப்பொருட்கள் பறிமுதல் - போலீசார் அதிரடி

பரமக்குடியில் 340 கிலோ புகையிலைப்பொருட்கள்–காவல்துறையினர் நடவடிக்கை

பரமக்குடியில் 340 கிலோ புகையிலைப்பொருட்கள்–காவல்துறையினர் நடவடிக்கை

Ramanathapuram District | பரமக்குடி பகுதியில் நகர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜ்குமார்சாமுவேல் அவர்களுக்கு குடோனில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    பரமக்குடியில் 340 கிலோ  தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்த காவல்துறையினர் பாபு என்பவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனையை முற்றிலும் தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் E.கார்த்திக்.IPS. அவர்கள் உத்தரவின் பேரில் காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், பரமக்குடி பகுதியில் நகர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜ்குமார்சாமுவேல் அவர்களுக்கு குடோனில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இதையடுத்து, கிடைத்த இரகசிய தகவலின் படி, பரமக்குடி அய்யாதுரை தெருவை சோ்ந்த பாபு என்பவரது குடோனை சோதனை செய்ததில் அதில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து பாபு என்பவரை கைது செய்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரிடமிருந்து 28 மூட்டையில் இருந்த 340 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    பரமக்குடி காவல் நிலையத்தில் அவரின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்தியாளர் பூ மனோஜ்குமார் ராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: Crime News, Paramakudi Constituency, Ramanathapuram

    அடுத்த செய்தி