Home /local-news /

காய்கறிகளில் உள்ள சத்துகளை கூறி விற்கும் பாட்டி - ஆர்வத்துடன் வாங்கும் மக்கள்

காய்கறிகளில் உள்ள சத்துகளை கூறி விற்கும் பாட்டி - ஆர்வத்துடன் வாங்கும் மக்கள்

காய்கறிகளை

காய்கறிகளை விற்பனை செய்வதோடு அவற்றில் உள்ள சத்துக்களை கூவி விற்கிறார் பெண்மணி ஒருவர். இதற்காகவே இவரிடம் ஆர்வமுடம் காய்கறிகளை வாங்குவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

காய்கறிகளை விற்பனை செய்வதோடு அவற்றில் உள்ள சத்துக்களை கூவி விற்கிறார் பெண்மணி ஒருவர். இதற்காகவே இவரிடம் ஆர்வமுடம் காய்கறிகளை வாங்குவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

    மதுரையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு இராமேஸ்வரத்தில் அனைத்து தெருக்களிலும் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட கீரைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை சிரித்த முகத்துடன் விற்பனை செய்து வருகிறார் இந்துராணி (60).


    ஒவ்வொரு பொருளையும் விற்கும் போது, அதில் நிறைந்துள்ள சத்துகளையும் கூறி விற்பனை செய்வதுடன்  சிரித்த முகத்துடன் இருக்கும் பாட்டியிடம் காய்கறிகள் வாங்குகின்றோம் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    இதுகுறித்து இந்துராணி பாட்டி கூறுகையில்:-


    தினமும் காலையில் மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் காய்கறிகளை வாங்கிவிட்டு மதியம் 2 மணிக்கு  புறப்பட்டு மாலை 6:00 மணி அளவில் இராமேஸ்வரம் வருவேன். பேருந்து நிலையத்தில் இரவு முழுக்க முழித்திருந்து காலையில் விடிந்தவுடன் அனைத்து தெருக்களிலும் காய்கறிகளை விற்க ஆரம்பிப்பேன்.

    காய்கறிகளை விற்றவுடன் திரும்ப ஊருக்கு சென்றுவிடுவேன். சிறுவயதில் இருந்து உழைக்க ஆரம்பித்ததால் எனக்கு சோர்வு என்பது கிடையாது. ஆரோக்கியமான உணவுகளை உண்டததால் தான் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று கூறினர்.


    ஒவ்வொரு கீரைக்கேற்ப 5 ரூபாயிலிருந்து 25 வரை விற்கிறேன். பயண செலவு, சாப்பாடு செலவு போக ஏதாவது வருமானம் கிடைக்கும் அதனை வைத்து வாழ்ந்து வருகிறேன் என்று கூறினார்.



    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி