ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா ஆயிரவேலி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயமங்கலம். இவருடைய மனைவி பூங்கோதை (வயது 65). மகன் ஈஸ்வரனுடன் தாய் பூங்கோதை வசித்து வந்தார்.
ஈஸ்வரன் சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார். வழக்கம் போல் ஆட்டோ ஓட்டிவிட்டு வீட்டிற்கு சாப்பிட சென்றுள்ளார். அப்போது, வீட்டில் தாயார் பூங்கோதை கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், திருவாடானை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
திருவாடானை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பூங்கோதையின் உடலை பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது.
விசாரணையில் தெரியவந்தது:-
வீட்டு பூஜை அறையில் ஒரு உண்டியலில் அவரது மகன் கடன் பெற்று வாங்கிய ஆட்டோவுக்கு மாதம் தோறும் தவணை செலுத்த அந்த உண்டியலில் பணம் சேர்த்து வந்தார்.
பூங்கோதையை கொன்ற கும்பல் அந்த உண்டியலை உடைத்து பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் வீட்டில் மற்ற அறையில் இருந்த பணம், நகைகள், பூங்கோதை அணிந்து இருந்த கம்மல் போன்றவை அப்படியே இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பூங்கோதையின் தலையில் இரும்பு கம்பி போன்ற ஆயுதத்தால் மூன்று இடங்களில் தாக்கியதில் பலமான காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது.
அவர்களது, வீடு தனியாக இருந்ததால் மர்ம நபர்கள் வீடு புகுந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து திருவாடானை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார்- ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.