ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று முதல் தொடங்கப்பட்டது.
ராமநாதபுரத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை தொடங்கியது. முதல்கட்டமாக 100 மாணவர்கள் சேர்க்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வகுப்புகள் நடைபெறுகின்றன.
மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டிட பணிகள் முடியும் வரை 2 ஆண்டுகளுக்கு தற்காலிகமாக ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் எய்ம்ஸ் மாணவர்களை சேர்க்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை தொடர்ந்து மீதம் உள்ள 50 இடங்கள் மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியின் கட்டுமான பணிகள் முடிவடையாததை அடுத்து ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியின் 5-வது தளத்தில் 2 ஆண்டுகளுக்கு தற்காலிக வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தேவையான ஆய்வகங்கள், விடுதிகள், அலுவலக கட்டிடங்கள் என அனைத்து கட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, உடற்கூறுயியல், உடலியங்கியல், பயோகெமிஸ்ட்ரி மற்றும் சமூகம் சார்ந்த மருத்துவத்துறைக்கு 8 பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.