இ
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காரங்காடு உள்ளது. இந்த கிராமத்தில் இயற்கையின் அழகாக சதுப்பு நிலக்காடுகள் நிறைய அலையாத்தி மரங்களால் அமைந்துள்ளது.
வனத்துறையினர் மற்றும் கிராம மக்கள் இணைந்து இங்கு சுற்றுலா மேம்பாட்டு மையம் செயல்படுத்தி வருகின்றனர்.மேலும், இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர வனத்துறை சுற்றுலா மேம்பாட்டு மையம் மூலம் படகு சவாரி நடந்து வருகிறது.
தற்போது, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது. தினமும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய ஆர்வமுடன் இங்கு குவிந்து வருகின்றனர்.
காரங்காடு சுற்றுலா மையத்தில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் பொதுமக்களுக்கு படகு சவாரி, கயாக்கிங், நீரில் மூழ்கி பார்த்தல், போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. உயிர் பாதுகாப்பு கவசத்துடன் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக படகு சவாரிக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். பொதுமக்கள் படகு சவாரி செய்வதற்கும், உணவு வசதிக்கும் சுற்றுலா மையத்தை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளும் வகையில் உள்ளது.
இங்கு வரும் சுற்றுலா பயணிகள் சுற்றுலாவோடு இங்கு உள்ள அலையாத்தி காடுகளை பாதுகாப்பதன் நோக்கத்தையும் புரிந்துகொள்ள இந்த சூழல் சுற்றுலா வழிவகுக்கிறது.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.