இராமநாதபுரம் மாவட்டம் சைல்ட்லைன் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் இணைந்து செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமூகம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 24ம் தேதி பெண் குழந்தைகள் தினத்தை நாடு முழுவதும் கொண்டாடி வருகிறது. அதன்படி, கல்லூரி பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில், பெண் குழந்தைகளுக்கான கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் பெண் குழந்தைகளின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு ஆகியவற்றை முக்கிய அம்சங்களாக கொண்டு கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில், சைல்ட் லைன் இயக்குனர் தேவராஜன், சமூக நலத்துறை டாக்டர் மோகனபிரியா, உதவி ஆய்வாளர் ஹெலன்ராணி, சைல்ட்லைன் குழுத்தலைவர், அஸ்ரவ் அலி மற்றும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பேராசிரியர் ஆ.வள்ளிவிநாயகம் ஆகியோர் கலந்து அறிகுறைகளை வழங்கினர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.