Home /local-news /

ராமநாதபுரம்: தபால் ஓட்டு மனுக்கள் பெறும் பணி தீவிரம்

ராமநாதபுரம்: தபால் ஓட்டு மனுக்கள் பெறும் பணி தீவிரம்

ராமநாதபுரம்: தபால் ஓட்டு மனுக்கள் பெறும் பணி தீவிரம்

ராமநாதபுரம்: தபால் ஓட்டு மனுக்கள் பெறும் பணி தீவிரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி,  தபால் வாக்குகள் பதிவு செய்வதற்கான மனுக்கள் பெறும் பணி தீவிரமாக  நடைபெறுகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, தபால் வாக்குகள் பதிவு செய்வதற்கான மனுக்கள் பெறும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

    மாநில தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள், செய்தியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு தபால் வாக்குகள் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 231 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்தந்த பகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் தங்களின் தபால் வாக்குகளை பெற்று செலுத்தி கொள்ளலாம் என்று மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளர்கள் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதையடுத்து நகராட்சி, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தபால் வாக்குகள் செலுத்தும் நபர்களுக்காக அந்தந்த வார்டுக்கு உரிய தேர்தல் நடத்தும் பகுதிகளில் மனுக்கள் பெறும் பெட்டிகள் வைக்கப்பட்டு வருகின்றன.

    இந்த பெட்டிகளில் மனு செய்யும் நபர்களுக்கு அவரவர் பணிபுரியும் நிறுவனம் அலுவலகங்கள் மூலம் தபால் வாக்குகள் வழங்கப்படும் என்றும், இதுகுறித்து விரிவான விளக்கக் குறிப்பு வெளியிடப்படும் என்றும் தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.


    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி