Home /local-news /

ராமநாதபுரம்: பெண்கள் பாதுகாப்பில் ஹெல்ப்லைன் (181) பங்களிப்பு

ராமநாதபுரம்: பெண்கள் பாதுகாப்பில் ஹெல்ப்லைன் (181) பங்களிப்பு

ராமநாதபுரம்: பெண்களின் பாதுகாப்பில் ஹெல்ப்லைன் (181) பங்களிப்பு

ராமநாதபுரம்: பெண்களின் பாதுகாப்பில் ஹெல்ப்லைன் (181) பங்களிப்பு

Womens Helpline | பெண்களின் பாதுகாப்பில் ராமநாதபுரம் மாவட்ட சமூகநலத்துறை ஒருங்கிணைந்த சேவை மையம் (Helpline 181) முக்கிய பங்காற்றி வருகின்றது. 

    பெண்களின் பாதுகாப்பில் ராமநாதபுரம் மாவட்ட சமூகநலத்துறை ஒருங்கிணைந்த சேவை மையம் (Helpline 181) முக்கிய பங்காற்றி வருகின்றது.

    பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்ற செயல்களை தடுப்பதில் காவல்துறையினருடன் இணைந்து மாவட்ட சமூகநலத்துறை ஒருங்கிணைந்த சேவை மையமும் (Helpline 181) சிறப்பாக பணியாற்றி வருகின்றது.

    பெண்கள் தனக்கு ஆபத்து ஏற்படும் பொழுது 181 என்ற உதவி எண்ணில்தொடர்பு கொள்கின்றனர். அப்போது அவர்களின் ஆபத்தை உணர்ந்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து விரைவாக அப்பகுதிக்கு சென்று பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கின்றனர்.

    இதுவரையிலும் ஹெல்ப்லைன் சென்டர் அதாவது சமூக நலத்துறை ஒருங்கிணைந்த சேவை மையம் மூலமாக 2019 முதல் 2022 வரை (WHL181) வந்த வழக்குகள் எண்ணிக்கை 128, இது தொடர்பாக பெறப்பட்ட வழக்குகள் 71, இதுவரையிலும் நேரடியாக மற்றும் காவல்துறையினர் மாதா வந்த வழக்குகள் எண்ணிக்கை 439, சேவைமையத்தின் மூலம் வழங்கப்பட்ட காவல் உதவி 45 ஆகும்.

    சமூக நலத்துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் அதிகமாக பதியப்பட்ட வழக்குகள் குடும்ப வன்முறை மற்றும் ஆதரவற்றோர் மீட்பு போன்றவை அதிகமான வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

    மையநிர்வாகி மோகனப்பிரியா அவர்கள் கூறுகையில்:-

    இந்த மையமானது மாவட்ட ஆட்சியரின் நேரடி பார்வையின் கீழ் செயல்படுகிறது (181WHO) சமூகநலத்துறை சேவை மையத்திற்கு வரும் அழைப்புகள் அனைத்தும் உடனடியாக அப்பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்டவரை மீட்டிருக்கிறோம்.

    பெண்கள் மற்றும் குழந்தைகள் சம்மந்தப்பட்ட எந்த வழக்குகளுக்கும் காவல் துறையினர் மூலம் உடனடி நடவடிக்கை எடுப்பதற்க்கு பெரிதும் உதவியாக இராமநாதபுரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.லயோலா இக்னேஷியஸ் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் அதிகாரி பெரிதும் உதவி புரிகிறார்.

    எந்நேரமும் எங்களுக்கு அழைப்புகள் வருவது உண்டு குறிப்பாக இரவில் அதிகமான அழைப்புகள் வருகிறது.நீண்ட தூரத்தில் இருக்கும் பகுதிக்கு நாங்கள் செல்ல முடியாவிட்டாலும், சம்பந்தப்பட்ட பகுதிக்கு உட்பட்ட காவல் துறையிடம் கூறுகையில் தாமதமின்றி உடனடியாக சென்று அப்பகுதியில் பாதிக்கப்பட்டவரை மீட்க உதவுகின்றனர்.

    மீட்கப்பட்டு வருபவர்களுக்கு காவல் உதவி, சட்டவசதி, மருத்துவ வசதி, 5 நாட்களுக்கு இருப்பிட வசதி ஏற்படுத்திக் கொடுக்கிறோம் என்று கூறினார்.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி