நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ராமேஸ்வரம் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
வருகிற 19 ஆந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், மாநில தேர்தல் ஆணைய உத்தரவின்படி ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், மாவட்ட காவல்துறையின் சார்பில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், பாதுகாப்பு உணர்வுடன் தங்கள் வாக்குகளை செலுத்தும் வகையில் கொடி அணி வகுப்பு நடைபெற்றது.
ராமேஸ்வரம் காவல்நிலையத்தில் இருந்து தொடங்கி, மேலத்தெரு, நடுத்தெரு, ராநாதசுவாமி திருக்கோயில் வழியாக உலா வந்து, திட்டக்குடி பகுதி வழியாக வேற்கோடு உள்ளிட்ட முக்கிய வீதிககளில் அணிவகுப்பு நடைபெற்றது.
இந்த கொடி அணிவகுப்பில் ராமநாதபுரம் ஆயுதப்படை, அதிவிரைவு படை, அதிரடிப் படை, போக்குவரத்து போலீசார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.