ராமேஸ்வரம் நகராட்சி மன்ற முதல் கூட்டமானது இன்று காலை நகர் மன்றத் தலைவர் அவர்களின் தலைமையில் நகராட்சியில் நகர்மன்ற கூட்ட அலுவலகத்தில் நடைபெற்றது இதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ராமேஸ்வரம் நகராட்சியானது ராமநாதபுரத்தின் இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். இந்த நகராட்சி மொத்தம் 21 வார்டுகளை உள்ளடக்கியதாகும். 2011-ம் ஆண்டு கணக்கீட்டின்படி மக்கள் தொகை 44,856 ஆக உள்ளது.
முதல் நகராட்சி கூட்டத்தில் ஒவ்வொரு வார்டுகளிலும் உள்ள மக்கள் பிரச்னைகள் குறைகளாக 55 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதில், முக்கிய தீர்மாங்களாக நகர்மன்ற தலைவர் கூறியதாவது:-
ராமேஸ்வரத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு அக்னி தீர்த்த கடற்கரையில் இருந்து அரசு மருத்துவமனையில் வரை உள்ள சாலைகளை சீரமைப்பதற்கு மற்றும் புதிய சாலை அமைப்பதற்கும் தமிழக அரசிடம் பரிந்துரை செய்திருந்தோம், அதை இன்று தீர்மானமாக நிறைவேற்றியுள்ளோம்.
இதையடுத்து, அனைத்து வார்டுகளிலும் உள்ள தெருவிளக்குகள் சரி செய்வதற்கு மற்றும் புதிய தெருவிளக்குகள் அமைப்பதற்கும் தமிழக அரசு ரூ. 2 கோடி 80 லட்சம் செலவில் எல்லா தெருவிளக்குகளையும் எல்.இ.டி விளக்குகளாக மாற்றி ராமேஸ்வரம் நகரை ஒளிமயமாக மாற்றுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
மக்களின் அத்தியாவசிய அன்றாட தேவையான குடிநீர் என்ற கட்டுப்பாடும் இன்றி வழங்குவதற்கும் மற்றும் குப்பைகள் தேங்குவதால் ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து அவர்களை காப்பாற்றுவதற்கும் குப்பைகள் தினந்தோறும் அள்ளுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராமேஸ்வரம் தீவில் பெரும்பான்மையாக வாழக்கூடிய முத்தரையர் சமுதாயமக்கள் மற்றும் சமுதாய நகர்மன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகில் மன்னருக்கு முழுஉருவசிலை வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழின தலைவர் தமிழக முதல்வரின் தந்தை மற்றும் முன்னாள் முதலமைச்சருமான டாக்டர் கலைஞர்முழு உருவச்சிலை ராமேஸ்வரத்தில் முக்கிய பகுதியில் வைப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.