ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் அருகே நீண்ட நாட்களாக பூட்டிய நிலையில் இருந்த முதலுதவி மையம் சட்ட மன்ற உறுப்பினர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
அகில இந்திய அளவில் மிக முக்கிய புண்ணியத் தலங்களில் ஒன்றான ராமேஸ்வரத்திற்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர், இங்கு வரும் பக்தர்கள் கோவில்களில் அவசரகால பயன்பாட்டிற்காக முதலுதவி மையம் அமைக்க உத்தரவிட்டப்பட்டது.
இதையடுத்து, முதலுதவி மையத்தில் பணிக்காக இரண்டு மருத்துவர்கள், இரண்டு செவிலியர்கள் மற்றும் ஒரு உதவியாளர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கிழக்கு ரதவீதியில் கோயிலுக்கு சொந்தமான கட்டிடத்தில் ஐந்து படுக்கைகளுடன் கூடிய முதலுதவி சிகிச்சை மையம் தயார் செய்யப்பட்டு நீண்ட நாட்களாக பூட்டிய நிலையில் இருந்தது.
இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் அவர்களால் ரிப்பன் வெட்டி இன்று திறக்கப்பட்டது. பின்பு மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர் ஆகிய ஐந்து பேருக்கும் நியமன ஆணை கடிதம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், ராமேஸ்வரம் திருக்கோவிலில் இணை ஆணையர் பழனிக்குமார், நகர்மன்ற தலைவர் நாசர்கான், துணைநகர்மன்ற தலைவர் தெட்சிணாமூர்த்தி மற்றும் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.