ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டு கெமிக்கல் மற்றும் பிளீச்சிங் பவுடர்கள் எரிந்து முற்றிலும் சேதமடைந்துள்ளது.
கமுதி அருகேயுள்ள பேரையூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. கமுதி தாலுகாவில் கிராம பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு இங்கு இருந்து மருந்துகள் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், பிளீச்சிங் பவுடர்கள் வந்து இறங்கின. நேற்று அதிகாலை 3 மணியளவில் கெமிக்கல் மற்றும் பிளீச்சிங் பவுடர் மூடைகள் இருக்கும் அறையில் இருந்து புகை வருவதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக முதுகுளத்தூர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து, முதுகுளத்தூர் மற்றும் கமுதி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
எரிந்த இடத்திற்கும் மருத்துவமனைக்கும் தூரம் என்பதால் யாருக்கும் பாதிப்பு இல்லை. இதனால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது, இருப்பினும் மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் முற்றிலும் எரிந்து தீயில் கருகி சேதமடைந்தன. இதுகுறித்து பேரையூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.