Home /local-news /

ராமநாதபுரம்: ஆரவாரமாக வலிமை படத்தை கொண்டாடிய ரசிகர்கள்

ராமநாதபுரம்: ஆரவாரமாக வலிமை படத்தை கொண்டாடிய ரசிகர்கள்

ராமநாதபுரம்:

ராமநாதபுரம்: ஆரவாரமாக வலிமை படத்தை கொண்டாடிய ரசிகர்கள்

இரண்டு வருடங்கள் கழித்து மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான அஜித்தின் வலிமை திரைப்படத்தை உற்சாகமாக ஆரவாரத்துடன் கொண்டாடிய அஜித் ரசிகர்கள்.

    இரண்டு வருடங்கள் கழித்து மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான அஜித்தின் வலிமை திரைப்படத்தை உற்சாகமாக ஆரவாரத்துடன் கொண்டாடிய அஜித் ரசிகர்கள்.

    சதுரங்கவேட்டை, தீரன், நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய, திரைப்பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவான வலிமை திரைப்படம் நான்கு மொழிகளில் உருவாகி இன்று தமிழகம் மற்றும் உலகமெங்கும் வெளியானது.

    இந்நிலையில், ராமநாதபுரத்தில் இருக்கும் மூன்று தியேட்டர்களிலும் வலிமை திரைப்படம் அதிகாலை 5 மணிமுதல் தொடங்கப்பட்டது. இதற்காக நேற்று இரவில் இருந்தே ரசிகர்கள் தியேட்டர்கள் முன்பு குவிந்து கொண்டாடி வந்தனர்.

    இதையடுத்து, தியேட்டர்கள் முன் குவிந்த ரசிகர்கள் பேனர்கள் வைத்து, அதில் அஜித்தின் படத்திற்கு பால் அபிஷேகம் செய்து வெடிகள் வெடித்து, மேலதாளத்துடன் விமர்சையாக கொண்டாடினர்.

    ராமேஸ்வரத்தில் தியேட்டர்கள் இல்லாததால் இங்கு உள்ள அஜித் ரசிகர்கள் மதியம் 2:00 மணி காட்சிக்கு, 27 கார்கள் அணிவகுப்பாக ராமேஸ்வரத்தில் இருந்து ராமநாதபுரம் சென்றனர்.

    காவல்துறையினர் சார்பில் வாகனங்களில் செல்லும்போது எந்தவொரு ஆரவாரமும் செய்யாமல் அமைதியாக செல்லவேண்டும் என்று அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Alagesan R
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி