இ
ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்- தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ரத்து செய்யப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை நடக்கும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டமும் மாதந்தோறும் நடக்கும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டமும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ரத்து செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையத்தில் தனியார் துறையின் மூலம் வாரந்தோறும் வெள்ளிகிழமை நடக்கும் வேலைவாய்ப்பு முகாமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.
செய்தியாளர்:பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.