ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற முக்கிய செய்திகளின் ஒருசில வரிகளில் காண்போம்
குடும்ப பிரச்சினை காரணமாக தொண்டி அருகே பெண் தீக்குளிக்க முயற்சி
தொண்டியில் உள்ள வெள்ளை மணல் தெருவில் குடும்ப பிரச்சினை காரணமாக பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி, அப்பகுதி மக்கள் அப்பெண்ணை சமாதானபடுத்தி காவல் நிலையத்தில் தகவல் அளித்ததில் கணவன் மீது வழக்கு பதிவு செய்தனர்
பேருந்தில் வீட்டிற்கு சென்ற பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை - போக்சோவில் ஒருவர் கைது
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் நேற்று பள்ளி சிறப்பு வகுப்பு முடிந்து பேருந்தில் வீட்டிற்கு வருகையில் மாணவனின் அருகில் அமர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெசவாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக்கோரியும் மற்றும் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெசவாளர்கள் பரமக்குடியில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கைக்குழந்தையுடன் இலங்கையிலிருந்து வந்து அகதிகள் தனுஷ்கோடியில் தஞ்சம்
ஒரு குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி 10 வயது சிறுமி, இரண்டு வயது கைக்குழந்தையுடன் இன்று காலையில் தனுஷ்கோடியில் கம்பிபாடு பகுதியில் அகதிகளாக வந்துள்ளனர்.
இதையடுத்து, மண்டபம் மரைன் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்திய பின்னர் மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தின் பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
நேற்றும் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் எந்தவொரு மாற்றமும் இல்லை ராமேஸ்வரத்தில் மட்டும் பைசாவின் விலை உயர்ந்துள்ளது.
ராமநாதபுரம்
பெட்ரோல்–113.03 , டீசல்– 103.04
ராமேஸ்வரம்
பெட்ரோல்– 112.79, டீசல்– 102.88
பரமக்குடி
பெட்ரோல்– 112.31, டீசல்– 102.55
திருவாடானை
பெட்ரோல்– 112.31, டீசல்–102.41
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.