இ
ராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரம் நகராட்சி உட்பட்ட மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் 17 வார்டுகளில் பெண்கள் போட்டியிட உள்ளனர். மற்ற பிற வார்டுகள் பொது வார்டுகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனுதாக்கல் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. இராமநாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகளில் 17 வார்டுகள் பெண்களுக்கும் 15 வார்டுகள் பொதுவார்டுகளாகவும் 1 வார்டு எஸ்.சி.வார்டாகவும் உள்ளது.
பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வார்டுகள் :4,7, 11, 14, 17,19, 22, 23,25, 27,29, 32 மற்றும் 33 ஆகிய 16 வார்டுகள் பெண்கள் போட்டியிடும் வார்டுகளாக உள்ளன.
பொது வார்டுகளாக 5,7,10, 12, 13,15,16, 18,20, 21,24, 30 மற்றும் 31 ஆகிய வார்டுகள் உள்ளன. எஸ்.சி. மகளிர் பிரிவினருக்கு 26-வது வார்டும்,எஸ்.டி. பொது பிரிவினருக்கு 28-வது வார்டும் ஒதுக்கப்பட்டுள்ளன.
செய்தியாளர்:பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.