திருவாடானை வட்டத்தில் உள்ள என்.மங்களம் கிராமத்தில் கணினி பட்டா திருத்த முகாம் ஆர்.டி.ஓ தலைமையில் நடைபெற்றது.
தமிழக அரசின் உத்தரவின்படி இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதியாக பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.அந்த வகையில், திருவாடானை வட்டத்தில் உள்ள என்.மங்கலம் கிராமத்தில் கணினி பட்டா திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றது.
என்.மங்கலம் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் அமையப்பெற்ற இம்முகாமில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது பிரச்சனைகளை கூறி கோரிக்கையை முன்வைத்தனர்.
இதில், வட்டாட்சியர் மற்றும் ஆய்வாளர் நில அளவை, துணை ஆய்வாளர் நில அளவை, கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் கலந்து கொண்டு மனுக்களை பெற்றுக்கொண்டு பட்டாக்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று தெரிவித்தனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.