Home /local-news /

மீனவர்களை விடுவிக்க பிணையத்தொகை: இலங்கைக்கு கண்டனம்.!

மீனவர்களை விடுவிக்க பிணையத்தொகை: இலங்கைக்கு கண்டனம்.!

மீனவர்களை

மீனவர்களை விடுவிக்க பிணையத்தொகை–கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்

Ramanathapuram |இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கை மற்றும் கைதான மீனவர்களை விடுவிக்க பிணையத் தொகை அறிவித்ததை  எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கை மற்றும் கைதான மீனவர்களை விடுவிக்க பிணையத் தொகை அறிவித்ததை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    தமிழக மீனவர்கள் , இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள நிலையில் அவர்களை விடுதலை செய்வதற்கு தொகையாக ஒருவருக்கு தலா ஒரு கோடி ரூபாய் செலுத்தினால் தான் விடுதலை செய்வோம் என்று இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    இலங்கையில் உள்ள மக்களே பசியும் பட்டினியுமாக வாழும் நிலையில், சிறையில் நமது மீனவர்களும் உணவில்லாமல் சிரமப்பட்டு வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.  இந்நிலையில், மீனவர்களை பாதுகாக்கும் பொருட்டும் இலங்கை சிறையில் உள்ள 12 தமிழக மீனவர்களையும் எந்தவித நிபந்தனைகளும் இன்றி விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    ஏஐடியுசி மீனவர் சங்கத்தின் சார்பாக மீனவ சங்க பொறுப்பாளர் மார்க்கஸ் தலைமையில், மீனவர் சங்க மாநில தலைவர் முருகானந்தம் மற்றும் கே.முருகானந்தம் ஆகியோர் முன்னிலையில் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்து கொண்டு கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி