Home /local-news /

ஆர்.எஸ். மடை அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையை திறந்து வைத்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்..

ஆர்.எஸ். மடை அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையை திறந்து வைத்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்..

ஆர்.எஸ்.

ஆர்.எஸ். மடை அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையை ஆட்சியர் திறந்து வைத்தார்

Ramanathapuram District | ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்  ஸ்மார்ட் வகுப்பறைகள் திறக்கப்பட்டது. திறப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு வகுப்பறைகளை திறந்து வைத்தார்.

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் திறக்கப்பட்டது. திறப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு வகுப்பறைகளை திறந்து வைத்தார்.

    தமிழகம் முழுவதும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஸ்மார்ட் வகுப்பறை துவங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

    இதனைதொடர்ந்து, ஆர்.எஸ் மடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் சார்பில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பிற்கு தேவையான ரூ.3 லட்சம் மதிப்புடைய ஐ.எஃப்.பி டிவி வழங்கப்பட்டுள்ளது.

    இதற்கான துவக்க விழா நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கர்லால் குமாவத் கலந்து கொண்டு வகுப்பறைகளை திறந்து வைத்தார்.

    இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். இதையடுத்து, ஐ.எஃப்.பி டிவியில் பாடங்கள் நடத்தப்பட்டது, மாணவ, மாணவியர்கள் ஆர்வமாக பாடங்களை பயின்றனர்.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி