ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்கலம் பகுதிகளில் மிளகாய் சாகுபடிக்காக விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில், பனிக்காலம் முடிந்தும் பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஆர்.ஏஸ்.மங்கலம் இதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. சாகுபடி செய்யப்பட்ட மிளகாய் செடிகள் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வளர்ச்சி நிலையை அடைந்து செடிகள் பூக்கும் பருவத்தில் உள்ளன.
இந்நிலையில் ஆர்எஸ் மங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான புல்லமடை, வல்லமடை, சிலுகவயல் செங்கொடி, இதயபுரம், ராமநாதமடை, வரவணி, எட்டிதிடல், சேத்திடல் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக காலை எட்டு மணிக்கு மேல் வரை கடும் பனிப்பொழிவு செய்து பனிமூட்டமாக காணப்படுகிறது.
இதனால், மிளகாய் செடிகளில் பூக்கும் பூ பனியால் அழுகி உதிர்ந்து விடுகின்றன. பூவில் இருந்து காய் முளைப்பது இல்லை.கடும் பனிப்பொழிவால் மிளகாய் சாகுபடி செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் கண்ணீர் விட்டு கதறிக்கொண்டிருக்கிறார்கள்.
செய்தியாளர் :பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.