Home /local-news /

காசோலை மோசடி.. நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் எஸ்பியிடம் கோரிக்கை மனு

காசோலை மோசடி.. நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் எஸ்பியிடம் கோரிக்கை மனு

Ramanathapuram

Ramanathapuram

Ramanathapuram | கடந்த 2020ம் ஆண்டு எங்களை சந்தித்து தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறினர்.

    ராமநாதபுரம் மாவட்டம் ராஜசிங்கமங்கலம் தாலுகா சித்தூர்வாடி கிராமம் பொதுமக்கள் தங்களை அதே பகுதியை சேர்ந்த 4 பேர் காசோலை மோசடி செய்ததாக கூறி மாவட்ட எஸ்பியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    மனுவில் அவர்கள் கூறியதாவது:-

    நாங்கள் சித்தூர்வாடி கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்களது கிராமத்தைச் சேர்ந்த லிசி அவரது கணவர் மணிமாறன், லில்லி அவரது கணவர் அந்தோணி மற்றும் ஜாக்குலின் கிளாராம் ஆகியோர் கடந்த 2020ம் ஆண்டு எங்களை சந்தித்து தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறினர்.

    அதற்கு நாங்கள் உடன்படாததால் எங்களிடம் உங்கள் நகைகளை அடகு வைத்து எங்களுக்கு வட்டிக்கு பணம் தாருங்கள் நாங்கள் அதை எங்களது நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து வட்டியாக அதிக பணம் தருகிறோம் என்று கூறினர்.

    இந்நிலையில், அதை நம்பிய நாங்கள் எங்களது நகைகளை வங்கியில் அடகு வைத்து சுமார் ஒரு கோடி வரை பணத்தை அவரிடம் கொடுத்தோம். அதன் பின்னர் அந்த பணத்திற்கு உரிய வட்டி தராததால் நாங்கள் எங்களது அசல் பணத்தை திருப்பிக் கேட்டபோது எங்களுக்கு அவர்கள் காசோலையாக அளித்தனர்.

    அதை நாங்கள் வங்கியில் மாற்ற முயன்ற போது பணம் இருப்பு இல்லை என்று கூறி வங்கி ஊழியர்கள் நிராகரித்தனர்.

    இதைதொடர்ந்து, வங்கியில் வைத்த எங்கள் நகைக்கு வட்டி கட்ட முடியவில்லை அதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய விசாரணை நடத்தி எங்களது அசல் பணத்தை திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.


    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி