ராமேஸ்வரம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களது பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு வீடு வீடாக சென்று துண்டு போட்டு வாக்கு சேகரிக்கின்றனர்.
ராமேஸ்வரம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களது பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு வீடு வீடாக சென்று துண்டு போட்டு வாக்கு சேகரிக்கின்றனர்.
ராமேஸ்வரம் நகராட்சியில் மொத்த 21- வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்., ம.நீ.ம., த.மா.கா., ம.தி.மு.க., தே.மு.தி.க., நாம் தமிழர், பா.ம.க., எஸ்.டி.பி.ஐ., அ.ம.மு.க., மற்றும் சுயேட்சைகள் என 105 பேர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
ஒவ்வொரு வார்டிலும் 4 முதல் 8 பேர் வரை போட்டியிடுகின்றனர் . இந்நிலையில் வார்டுகளில் உள்ள மக்களை கவரும் வகையில், வேட்பாளர்கள் பலரும் வாக்காளர்களுக்கு துண்டு போட்டு வாக்கு சேகரிக்கின்றனர்.
மேலும், சில கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் அருகிலுள்ள வார்டுகளில் இருந்து, தங்களுக்கு அறிமுகம் இல்லாத இடங்களில் போட்டியிடுகின்றனர். இதனால், தொடர்ந்து வீடு வீடாக சென்று ஆள் சேர்க்கும் முயற்சியிலும் தீவிரம் காட்டுகின்றனர்.
இந்நிலையில், ஒவ்வொரு வேட்பாளரும் அனைத்து வாக்காளர்களுக்கும் துண்டு போட்டு மரியாதையான முறையில் வாக்கு சேகரிக்கின்றனர். இதில் சிலர் தங்களுக்கு போட்டியாக உள்ள வேட்பாளர்கள் துண்டு போட்டால், அதற்கு மேல் ஏதாவது செய்ய வேண்டும் என்று பூ, பழம், வெற்றிலை பாக்கு, வைத்து வாக்காளர்களைக் கவர வித்தியாசமான முறையில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்காளர்கள் யாரை ஆதரிப்பது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் துண்டுகளின் அளவுகளை வைத்து இவர் பெரிய துண்டு, இவர் சிறிய துண்டு என்று மக்கள் கிண்டலாக பேசுகின்றனர்.
ராமநாதபுரத்தில் துண்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், வேட்பாளர்களே நேரடியாக மதுரையில் இருந்து இறக்குமதி செய்வதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.