முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த இளம் வயது ராணுவ வீரர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள மேலச்சாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன்-சந்தனமாரி தம்பதியரின் மகன் மணிகண்டன். இவர், குழந்தைப்பருவத்திலிருந்தே ராணுவத்தில் சேர வேண்டும் என தன் லட்சியமாக கொண்டு இருந்த இவர், அவரது 19 வயதில் இந்திய ராணுவத்தில் தேர்வு செய்யப்பட்டு பெங்களூரில் உள்ள ராணுவ மையத்தில் பொறியாளர் பிரிவில் பயிற்சி பெற்று வந்தார்.
இந்நிலையில், அவருக்கு திடீரென நோய்வாய்ப் பட்ட அவரை பரிசோதித்த போது அவர் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ராணுவ பயிற்சி பெற்று வந்த அந்த இளம் வீரருக்கு அங்கிருந்த ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பயனளிக்காமல் ராணுவ பயிற்சி மையத்திலேயே அவர் வெள்ளிக் கிழமை உயிரிழந்தார்.
இதனையடுத்து, அவரது உடல் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் உள்ள மேலச்சாக்குளத்திற்கு கொண்டு வரப்பட்டு அவரது சொந்த நிலத்தில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
இளம் வயதிலேயே நாட்டுக்காக ராணுவத்தில் சேர்ந்து துடிப்பாக பணியாற்ற வேண்டும் என ஆர்வத்துடன் இருந்த ஒரு இளம் ராணுவ வீரர் உடல் நலக்குறைவால் உயிரிழந்து போன சம்பவம் அந்த பகுதி கிராம மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார்- இராமநாதபுரம்
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.