ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் பகுதியில் வாலிபரை கட்டையால் அடித்து கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ராமநாதபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவு.
பாம்பன் பகுதியை சேர்ந்த சந்தியா ரெனி என்பவர் விசைப்படகில் ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2013 ஆம் தேதி டேனி மற்றும் பிச்சை ஆகியோர் பாம்பனில் உள்ள சந்தியா ரெனி வீட்டு வழியாக செல்லும்போது அவரது நாய் இருவரையும் பார்த்து குரைத்துள்ளது.இதுதொடர்பாக இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில் வாய்த்தகராறு ஏற்பட்ட அன்றைய தினமே மாலை டேனி மற்றும் பிச்சை ஆகியோர் சந்தியா ரெனி வீட்டிற்கு அத்துமீறி சென்று அவருடன் தகராறு ஏற்பட்டு கட்டையால் தாக்கியதில் சந்தியா ரெனி உயிரிழந்தார்.
இதையடுத்து பாம்பன் காவல் நிலையத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் குற்றவாளியான டேனி என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டார்.
இதனை அடுத்து இரண்டாவது குற்றவாளியான பிச்சை என்பவரை ராமநாதபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இறுதி விசாரணைக்காக போலீசார் ஆஜர்படுத்தினர்.
பின்னர் விசாரணை நடத்திய நீதிபதி குற்றவாளி பிச்சைக்கு ஆயுள் தண்டனையும், ரூ.8,000 அபராதம் விதித்து உத்தரவிட்டதோடு அபராத தொகையை கட்ட தவறினால் கூடுதலாக மூன்று மாதங்கள் சிறை தண்டனை என நீதிபதி சீனிவாசன் உத்தரவிட்டுள்ளார்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.