Home /local-news /

ராமநாதபுரம் கடற்கரையில் தேசிய கடல் அலை துடுப்பு போட்டி.. பல மாநிலத்தவர்கள் பங்கேற்பு

ராமநாதபுரம் கடற்கரையில் தேசிய கடல் அலை துடுப்பு போட்டி.. பல மாநிலத்தவர்கள் பங்கேற்பு

கடலலை

கடலலை துடுப்பு போட்டி

ராமநாதபுரம் அருகே உள்ள பிரப்பன்வலசை கடற்கரையில் தேசிய அளவிலான கடலலை துடுப்பு படகு போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான  வெளிமாநில வீரர்கள் பங்கேற்றனர், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

    ராமநாதபுரம் அருகே உள்ள பிரப்பன்வலசை கடற்கரையில் தேசிய அளவிலான கடலலை துடுப்பு படகு போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான  வெளிமாநில வீரர்கள் பங்கேற்றனர், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் பிரப்பன்வலசை கடற்கரையில் தேசிய அளவிலான கடலலை துடுப்பு போட்டி கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னால் போட்டியின் ஆர்கனைசர் ஆன சர்ஜி கான் அவர்களால் ஆரம்பித்து, தற்போது போட்டி நடைபெற்று (28-29-04-2022) ஆகிய நாட்கள் முதல் நடைபெற்றது.

    தேசிய அளவிலான கடல் அலை சறுக்கு துடுப்பு போட்டி 200 மீட்டர் , இரண்டு கிலோமீட்டர், ஆறு கிலோமீட்டர் ,12 கிலோமீட்டர் ஆகிய தூரத்தில் பங்குபெறும் வீரர்கள் கலந்து கொண்டனர்

    இப்போட்டியில் சுமார் 65 வீரர்கள் பங்குபெற்று போட்டி நடைபெற்றது. இதில் 15 பெண்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் மற்றும் இரண்டாவது மூன்றாவது வரும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு ஒலிம்பிக் போட்டிக்கு விளையாட தேர்வு செய்யப்படுவார்கள்.

    கோவா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு ,ஆந்திரா, போன்ற இடங்களில் இப்போட்டி பயிற்சி நடைபெற்று வருகிறது. இப் போட்டியின் நடுவர்களாக எம்எல் சர்மா, எஸ்.எவ்.ஐ தலைவர் அருண்வாசு ஆகியோர் கலந்துகொண்டு பார்வையிட்டனர்.

    இப்போட்டியை காண ஏராளமான வெளி மாநில பயணிகள் மற்றும் உள்ளூர் பொது மக்கள் போட்டியை ஆர்வமுடன் ரசித்து வருகின்றனர். இப்போட்டியில் பங்கு பற்ற வீரர்கள் ஆன்லைன் மூலமாக தேர்வு செய்யப்பட்டார்கள்.

    இதையடுத்து, வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆடவர் 12 கி.மீ பந்தயத்தில் தேசிய சாம்பியன்ஷிப்பை சேகர் பட்சாய் க்ளீன் ஸ்வீப் என்பவருக்கும், பெண்களுக்கான தொலைதூரப் பந்தயத்தில் மோனிக்கா புகழரசுக்கும் மற்றும் (200 மீட்டர்கள்) பந்தயத்தில் ஸ்பிரிண்ட் ஆகியோருக்கு தேசிய சாம்பியானாக 3 பிரிவுகளில் முதல் பரிசுகள் வழங்கப்பட்டன.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி