ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பில் சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு மற்றும் அதிமுக அரசின் நலத் திட்டங்களை ரத்து செய்ததைக் கண்டித்து ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் முன்பு அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்,
ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார், முன்னாள் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றினார்,
இதில் தமிழகத்தில் திமுக வேட்பாளர்கள் பொதுமக்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது,
சொத்து வரியை உயர்த்த மாட்டோம் என்று தெரிவித்த திமுகவினர், தற்போது திடீரென 100 மடங்கு சொத்து வரியை உயர்த்தி உள்ளது கண்டிக்கத்தக்கது. அதிமுக ஆட்சிக் காலத்தில் கொடுக்கப்பட்ட தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை ரத்து செய்ததை கண்டித்து ஏராளமான அதிமுகவினர் பதாகைகளுடன் கண்டன கோஷம் எழுப்பினர்.
இப்போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டு தங்களது கண்டனங்களை
கோஷங்களாக எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.