கொரோனா பரவல் காரணமாக வார முதல் மற்றும் இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் சுற்றுலா தளங்கள் மூடப்பட்டு அனுமதிக்கப்படாத நிலையில் ராமநாதபுரத்தில் உள்ள அப்துல்கலாம் தேசியநினைவகமும் மூடப்பட்டுள்ளது.
அதனை சுற்றி உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, வெறிச்சோடி காணப்படுகிறது.இதனால், அங்கு சுற்றியுள்ள யாசகர்கள் பசியில் வாடும் துயரம் ஏற்படுகிறது.
இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில்:-
கடந்த இரண்டு வாரங்களாக வெள்ளி, சனி, ஞாயிறு, ஆகிய மூன்று நாட்கள் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் தேசிய நினைவகத்திற்கும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படாததால் இங்கு யாரும் வருவது இல்லை.
விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் விற்பனை ஆகாமல் விணாகிவிடுகிறது. கடைகள் திறந்தாலும் பொருட்கள் வாங்க யாரும் வருவது இல்லை. இதனால் தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுகிறது என்று கூறினார்.
செய்தியாளர்:பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.