Home /local-news /

இலங்கைக்கு கடத்த முயன்ற 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்..

இலங்கைக்கு கடத்த முயன்ற 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்..

இலங்கைக்கு

இலங்கைக்கு கடத்த முயன்ற 500 கிலோ கடல் அட்டை பறிமுதல்

Ramanathapuram District | மரைன் போலீசார் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 500 கிலோ கடல் அட்டையை பறிமுதல் செய்தனர்.

    ராமேஸ்வரம் அருகே இலங்கை கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்.. மரைன் போலீசார் நடவடிக்கை.. 3 பேர் கைது.

    மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் கடல் பசு, கடல் குதிரை, கடல் அட்டை, உள்ளிட்ட மூவாயிரத்திற்கும் அதிகமான அரிய கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

    இந்த அரிய கடல்வாழ் உயிரினங்களை பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், குறிப்பாக தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பிடித்து இலங்கைக்கு தொடர்ச்சியாக கடத்தி வருகின்றனர்.

    ராமேஸ்வரம் அடுத்த சேரான்கோட்டை கடற்கரை பகுதியில் தடை செய்யப்பட்ட கடல் அட்டையை இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மரைன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற மரைன் போலீசார் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 500 கிலோ கடல் அட்டையை பறிமுதல் செய்து தனுஷ்கோடி மரைன் காவல்நிலையத்திற்கு கொண்டு வந்து செல்வம், தீபக், ப்ரோன்ராஜ் ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி