Home /local-news /

இராமநாதபுரம்: முகக்கவசம் இன்றியும் எச்சில் துப்பினாலும் 500 அபராதம் 

இராமநாதபுரம்: முகக்கவசம் இன்றியும் எச்சில் துப்பினாலும் 500 அபராதம் 

இராமநாதபுரம்: முகக்கவசம் இன்றியும் எச்சில் துப்பினாலும் 500 அபராதம் 

இராமநாதபுரம்: முகக்கவசம் இன்றியும் எச்சில் துப்பினாலும் 500 அபராதம் 

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இரயில் நிலையங்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் முகக்கவசம் அணியாமல் சுற்றி திரிந்தாலும், எச்சில் துப்பினாலும் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என இரயில்வே பாதுகாப்பு படையினர் எச்சரித்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இரயில் நிலையங்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் முகக்கவசம் அணியாமல் சுற்றி திரிந்தாலும், எச்சில் துப்பினாலும் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என இரயில்வே பாதுகாப்பு படையினர் எச்சரித்துள்ளனர்.


    இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் சில வடமாநில சுற்றுலா பயணிகள் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பயன்படுத்தி எச்சில் துப்புகின்றனர் மற்றும் காலையில் சுவாமி தரிசனம் செய்து விட்டு இரவு நேரம் இரயில் வரும் வரையில் இரயில்நிலைய பிளாட்பாரங்களில் முகக்கவசம் அணியாமல் சுற்றுகின்றனர்.



    இதனை தடுக்கும் வகையில் இரயில்வே பாதுகாப்பு படையினர் எச்சரித்துள்ளனர். மேலும், கொரோனா பரவலை தடுக்க சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளனர்.


    பயணச்சீட்டு வாங்கும் இடத்தில் சமூக இடைவெளி பின்பற்றி வரிசையில் நிற்க வேண்டும். முகக்கவசம் அணிந்தே இருக்க வேண்டும். அடிக்கடி சானிடைசர் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரைகள் கூறியுள்ளனர்.



    இந்த கட்டுபாடுகளை மீறுவோர்க்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும் என இரயில்வே பாதுகாப்பு படையினர் எச்சரித்துள்ளனர்.


    செய்தியாளர்:பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி