இ
ராமநாதபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குகளை பதிவு செய்ய 342 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 79 வாக்குசாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரம், இராமேஸ்வரம், கீழக்கரை, பரமக்குடி, ஆகிய 4 நகராட்சிகள் உள்ளன. அபிராமம், கமுதி, மண்டபம், முதுகுளத்தூர், ஆர்.எஸ்.மங்கலம், சாயல்குடி, தொண்டி ஆகிய 7 பேரூராட்சிகள் உள்ளன.
மொத்தமாக 11 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி 4 நகராட்சிகளில் மொத்தம் 111 நகராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 7 பேரூராட்சிகளில் மொத்தம் 108 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் தேர்தல் நடக்க உள்ளது.
குறிப்பாக, உள்ளாட்சி தேர்தலுக்கென இராமநாதபுரம் நகராட்சியில் 63 வாக்குச்சாவடிகளும், இராமேஸ்வரம் நகராட்சியில் 42 வாக்குச்சாவடிகளும் கீழக்கரை நகராட்சியில் 43 வாக்குச்சாவடிகளும், பரமக்குடி நகராட்சியில் 83 வாக்குச்சாவடிகளும், என மொத்தம் 231 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்:பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.