ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் மீன் மார்க்கெட்டில் 30 கிலோ அழுகிய மீன் பறிமுதல் செய்து மீன்வளத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை.
மண்டபம் பகுதியில் செயல்பட்டு வரும் மீன் மார்க்கெட்டில் அழுகிய மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மண்டபம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அப்துல் காதர் ஜெய்லானி மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
இந்த ஆய்வின் போது 30 கிலோ அழுகிய மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு, இனிமேல் இது போன்று அழுகிய மீன்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.