Home /local-news /

பரமக்குடியில் சித்திரை திருவிழா.. வைகை ஆற்றை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரம்..

பரமக்குடியில் சித்திரை திருவிழா.. வைகை ஆற்றை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரம்..

பரமக்குடியில்

பரமக்குடியில் சித்திரை திருவிழா–வைகை ஆற்றை தூய்மைப்படுத்தும் பணிகள் மும்முரம்

Ramanthapuram District | பரமக்குடி வரதராஜ பெருமாள் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்படுகிறது.

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றை தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது. ஏப்ரல் 5-ம் தேதி வரதராஜப் பெருமாள் கோவிலில் கொடியேற்றப்படுகிறது.

    மதுரை வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவத்திற்கு அடுத்தபடியாக பரமக்குடியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெறும்.

    பரமக்குடி வரதராஜ பெருமாள் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்படுகிறது. 14 ஆம் தேதி திருக்கல்யாணமும், 15 ஆம் தேதி தேரோட்டமும், 16 ஆம் தேதி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் தடைபட்டிருந்ததால் வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நடைபெறவில்லை. இதனால் வைகை ஆறு முழுவதும் கருவேல மரங்கள் நிறைந்து காணப்படுகிறது.

    இதையடுத்து, சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு பரமக்குடி நகராட்சி சார்பில் வைகை ஆற்றை தூய்மைப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. வைகை ஆற்றின் ஆற்று பாலம் பகுதியில் இருந்து தரைப்பாலம் வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வைகை ஆற்றை தூய்மைப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளது.

    இந்நிலையில், ராமநாதபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதால் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி