முகப்பு /Local News /

Ramzan : ராமலான் திருநாள் சிறப்பு தொழுகை... அன்பை பரிமாறிக் கொண்ட இஸ்லாமியர்கள்!

Ramzan : ராமலான் திருநாள் சிறப்பு தொழுகை... அன்பை பரிமாறிக் கொண்ட இஸ்லாமியர்கள்!

X
ராமலான்

ராமலான் திருநாள் சிறப்பு தொழுகை; அன்பை பரிமாறிக் கொண்டனர்

Ramanathapuram : ராமநாதபுரம் மாவட்டம் பாரதி நகர் அருகே வசந்தம் மஹால் திடலில் இன்று ரமலான் திருநாளை முன்னிட்டு ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

  • Last Updated :

ராமநாதபுரம் மாவட்டம் பாரதி நகர் அருகே வசந்தம் மஹால் திடலில் இன்று ரமலான் திருநாளை முன்னிட்டு ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

கடந்த ஒரு மாதமாக உலகமெங்கும் இஸ்லாமிய பெருமக்கள் ரமலான் திருநாளை கொண்டாட நோன்பிருந்து வந்தார்கள். இந்நிலையில், நேற்று வானில் தெரிந்த பிறையை யொட்டி இன்று காலை ரமலான் திருநாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.

இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டம் பாரதி நகர் அருகே வசந்தம் மஹால் திடலில் ஏராளமான இஸ்லாமியர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் அல்லாஹ்வை நினைத்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பின் அனைவரும் ஒன்றுகூடி நோய் நொடி இல்லாமல் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்று வேண்டி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். சிறப்பு தொழுகை முடிந்த பின்னர் அனைவரும் கட்டிப்பிடித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள்.

செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.

top videos
    First published:

    Tags: Eid Mubarak, Ramanathapuram, Ramzan