Home /local-news /

ராமநாதபுரம்: வண்ணாங்குண்டு விளைநிலங்களை சூழ்ந்த மழைநீர் - விவசாயிகள் வேதனை

ராமநாதபுரம்: வண்ணாங்குண்டு விளைநிலங்களை சூழ்ந்த மழைநீர் - விவசாயிகள் வேதனை

தொடர் மழையால் நெல் நன்கு விளைந்த நிலங்களில் தண்ணீர் தேங்கியது.இதன் காரணமாக அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள வண்ணாங்குண்டு பகுதியில் விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. விளைநிலங்களை மழைநீர் சூழ்ந்த நிலையிலும் அறுவடை பணியை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.

    இந்த ஆண்டு எதிர்பார்த்ததை விட அதிக மழை பெய்துள்ள நிலையில், உபரி நீர் வாய்க்கால் மூலம் வெளியேறுவதற்கு வழியில்லாமல் அதிக அளவு வயல்களில் சூழ்ந்து காணப்படுகிறது.

    தொடர் மழையால் நெல் நன்கு விளைந்த நிலங்களில் தண்ணீர் தேங்கியது.இதன் காரணமாக அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.

    இதுகுறித்து வண்ணாங்குண்டு விவசாயிகள் கூறியதாவது:

    தண்ணீர் தேங்காத நிலத்தில் இயந்திரங்கள் மூலமாக நெல் அறுவடையை செய்ய இயலும்.தற்போது முழங்கால் வரை தேங்கியுள்ள நீரில் நெற்கதிர்கள் முற்றிய நிலையில் அறுவடைக்கு தயாராக உள்ளது.

    வேலை ஆட்கள் மூலமாக கதிர் அறுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம்.உரிய நேரத்தில் நெற்பயிர்களை அறுவடை செய்யாவிட்டால் தண்ணீரில் விழுந்து மீண்டும் முளைக்கும் நிலை ஏற்படும்.வரப்புகளில் நெற்கதிர்களை மொத்தமாக கட்டி அடுக்கி வைக்கின்றோம்.

    இவற்றை மூன்று நாட்கள் உலரவைத்து பின்னர் கதிரில் இருந்து நெல்மணிகளை பிரித்தெடுக்கும் பணி நடக்க உள்ளது. ஏக்கருக்கு ரூ.15 ஆயிரத்திற்கும் மேல் செலவு செய்தும் எதிர்பார்த்த விளைச்சல் இல்லாத நிலையால் வேதனையாக உள்ளது என்றனர்.

    மேலும், கீழக்கரை பேரூராட்சி வருவாய்த்துறையினர் மழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை ஆய்வு செய்து முறையாக விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

    செய்தியாளர்:பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி