நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் போன்றவற்றின் விலை கடந்த சில நாட்களாக கடுமையாக அதிகரித்து வருகிறது. உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் பெட்ரோல் விலை 112 ரூபாய் என்ற அளவிலும், டீசல் விலை லிட்டருக்கு 102 ரூபாய் என்ற அளவிலும் விற்பனையாகி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெட்ரோல் , டீசல் விலையைபொறுத்தவரையில் நேற்று போலவே இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தில் எந்தவொரு உயர்வும், குறைவும் இல்லாமல் உள்ளது.
ராமநாதபுரம்:
பெட்ரோல்–112.09 | டீசல்– 102.19
ராமேஸ்வரம்
பெட்ரோல்– 112.79 | டீசல்– 102.88
பரமக்குடி:
பெட்ரோல்– 112.31 | டீசல்– 102.41
திருவாடானை:
பெட்ரோல்– 112.31 | டீசல்–102.41
ஆறு நாட்களாக எந்தவொரு மாற்றமும் இன்றி அதே விலைதான் நீடிக்கிறது ராமநாதபுரத்தில் மட்டும் உயர்ந்து குறைந்து வருகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை வாசி உயர்ந்ததால் ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக சுற்றுலா பயணிகள் கூறுகின்றனர். மேலும், பேருந்துகளை நாடி சுற்றுலா பயணிகள் செல்வதால் ஆட்டோ ஓட்டுனர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.