இராமேஸ்வரம் மீன்வளத்துறை அலுவலகத்தில் கழுதைக்கு மனு கொடுக்கும் போராட்டமானது கடல் தொழிலாளர் சங்கம் (CITU) மற்றும் இராமேஸ்வரம் தீவு அனைத்து நாட்டுப்படகு மற்றும் சிறுதொழில் மீனவர்கள் இணைந்து நடத்தினர்.
இராமேஸ்வரம் தீவு கடல் பகுதியில் இரட்டைமடி, சுருக்குமடி, விசைப்படகுகள் மற்றும் கரையோர மீன்பிடிப்புகளை தடுத்து நிறுத்துவதாக RDO அவர்கள் முன்னிலையில் மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குநர் அளித்த உத்தரவாதம் நிறைவேற்றப்படாததையும், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அரசு நிர்வாகங்களிடம் கொடுக்கப்படும் மனுக்கள் மீது எந்தவிட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததை கண்டித்தும் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், கழுதைக்கு மாலை போட்டும், அனைவரின் காதில் பூ வைத்தும் இராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் இருந்து மீன்வளத்துறை அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று கழுதைக்கு மனு கொடுத்து போராட்டம் நடத்தினர்.
மேலும், சட்ட விரோத மீன்பிடிப்புகள் தொடர நடைபெறும் பணபரிமாற்றம் குறித்து இராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் மீது பொது விசாரணை நடத்திடு! கூண்டோடு பணிமாறுதல் செய்திடு! என்று முழக்கமிட்டனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.