Home /local-news /

தனுஷ்கோடியில் ஊற்று தோண்டி தண்ணீர் குடிக்கும் மக்கள்

தனுஷ்கோடியில் ஊற்று தோண்டி தண்ணீர் குடிக்கும் மக்கள்

இராமேஸ்வரத்தில்

இராமேஸ்வரத்தில் முக்கிய தொழில் நகரமாக விளங்குகியது தனுஷ்கோடி. 1964- ல் ஏற்பட்ட புயலால் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு அழிந்து போனது, இந்த நகரம்.

இராமேஸ்வரத்தில் முக்கிய தொழில் நகரமாக விளங்குகியது தனுஷ்கோடி. 1964- ல் ஏற்பட்ட புயலால் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு அழிந்து போனது, இந்த நகரம்.

    இராமேஸ்வரத்தில் முக்கிய தொழில் நகரமாக விளங்குகியது, தனுஷ்கோடி. 1964- ல் ஏற்பட்ட புயலால் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு அழிந்து போனது, இந்த நகரம்.

    புயலுக்கு பிறகு பல மீனவர்கள் வாழ்வாதாரத்திற்காக இடம் பெயர்ந்தனர். சில மீனவர்கள் வாழ்ந்தாலும், மடிந்தாலும் இந்த கடல் மண்ணிலும், உப்பு காற்றிலும் தான் என பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகின்றனர்.

    அழிந்து போன தனுஷ்கோடியில், கடல்நீர் சூழ்ந்து இருந்தாலும், தண்ணீர் வசதி என்பது இல்லை, இராமேஸ்வரத்தில் இருந்து வரும் தண்ணீர் லாரிகளில் விலைக்கு வாங்கி மட்டுமே தண்ணீர் குடிக்க முடியும்.

    வசதி இருப்பவர்கள் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். விலைக்கு வாங்க வசதி இல்லாதவர்கள் கடல் மண்ணில் குழி தோண்டி அந்த குழியில் இருந்து வரும் ஊத்து தண்ணீரையே குடித்து வாழ்கிறார்கள். கடல்நீர் சூழ்ந்து இருந்தாலும், ஊற்றில் இருந்து எடுக்கப்படும் நீர், உப்பு கைப்பது இல்லை.

    மீண்டும் பழைய தொழிற்நகரமாக மாறிவரும் தனுஷ்கோடிக்கு நல்ல தண்ணீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என மீனவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி