திருவாடானை அருகே ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து பால் வேன் சாலையோரம் இருந்த கருவேலை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுனர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் தொண்டி நோக்கி பாக்கெட் பால் ஏற்றி கொண்டு வாகனம் சென்றது.
இந்நிலையில், பால் வாகனமானது அச்சங்குடி விளக்கு அருகே வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கருவேல மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பால் வேன் ஓட்டிவந்த பிரபாகரன் (29) படுகாயமடைந்தார். இதையடுத்து, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பிரபாகரனை மீட்டு 108 ஆம்புலன்ஸில் திருவாடானை அரசு தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பி அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர்.
நல்வாய்ப்பாக அவ்வழியாக எதிரே வாகனம் ஏதும் வராததால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.