Home /local-news /

வாயில் கருப்பு துணிகட்டி எதிர்கட்சியினர் ஒன்றிய குழு கூட்டத்தில் பங்கேற்பு... 

வாயில் கருப்பு துணிகட்டி எதிர்கட்சியினர் ஒன்றிய குழு கூட்டத்தில் பங்கேற்பு... 

வாயில்

வாயில் கருப்பு துணிகட்டி எதிர்கட்சியினர் ஒன்றிய குழு கூட்டத்தில் பஙகேற்பு 

Ramanathapuram District | ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் புல்லாணி தலைமையில் நடைபெற்றது.

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் புல்லாணி தலைமையில் நடைபெற்றது.

    14 கவுன்சிலர்களை கொண்ட திருப்புல்லாணி ஒன்றியத்தில் ஒரு அ.தி.மு.க கவுன்சிலர் பங்கேற்காத நிலையில் 4 அதிமுக கவுன்சிலர்கள் வாயில் கருப்பு துணி கட்டி சொத்து வரி உயர்வை கண்டிக்கும் விதமாக ஒன்றியக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

    மேலும், சம்பந்தப்பட்ட வார்டு கவுன்சிலர்கள் பகுதியில் உள்ள பிரச்னைகளான காவிரி குடிநீர் சரிவர மக்களுக்கு கிடைக்கவில்லை, அதற்கு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இதையடுத்து, மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து கிடைக்க உதவி செய்ய வேண்டும் என்றும், குறைந்தளவு மின் அழுத்தங்கள் உள்ள பகுதியில் மின்சாரம் தடைபடாமல் கிடைக்க டிரான்ஸ்பார்மர்கள் அமைத்துதர வேண்டும் என கவுன்சிலர்கள் வாயிலாக தெரியப்படுத்தினர்.

    மேலும், குப்பைகள் தினசரி காலையில் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்பவர்கள் செல்லும் முன் அப்பகுதியில் அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. முக்கிய தீர்மானங்களாக சாலை வசதி அமைப்பதை பற்றி நிறைவேற்றப்பட்டது.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி