ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு கலைக்கல்லூரியை மகளிர் கல்லூரியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பரமக்குடி பொன்னையாபுரம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இங்கு 680 மாணவர்கள், 400 மாணவிகள் என 1080 பேர் படித்து வருகின்றனர். இக்கல்லூரியை மகளிர் கல்லூரியாக தமிழக அரசு மாற்ற வேண்டும் என அறிவித்துள்ளது.
இக்கல்லூரியை நம்பி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏழை எளிய மாணவர்கள் பயின்று வருகின்றனர்.மகளிர் கல்லூரியாக மாற்றப்பட்டால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்கள்.
இதையடுத்து, மகளிர் கல்லூரியாக மாற்றப்பட்டால் மேற்படிப்பிற்காக 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராமநாதபுரம் அல்லது கடலாடி அரசு கல்லூரிக்கு செல்ல வேண்டும். இதனால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
எனவே பரமக்குடி அரசு கலைக் கல்லூரியை மீண்டும் இருபாலர் கல்லூரியாக தொடர தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மகளிர் கல்லூரியாக மாற்ற கூடாது எனவும் இதற்கு கண்டனம் தெரிவித்து,கல்லூரியில் பயிலும் மாணவர்கள் சுமார் 400க்கும் மேற்பட்டோர் கல்லூரி வாசலில் அமர்ந்து கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் போலீசார் பேச்சுவார்த்தையை அடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர். மகளிர் கல்லூரியாக மாற்றுவதை தமிழக அரசு கைவிடாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.