ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை ஆற்று பாலத்தின் இறக்கத்தில் உள்ள வைகை நகர் பகுதியில் உள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
பரமக்குடி தாலுகா அலுவலக ரோட்டின் வழியாக ஆற்றுப்பாலம் ரோடு செல்கிறது. மறு கரையாக எமனேஸ்வரம் வைகை நகர் உள்ளது.அப்பகுதியில் ரோடு பெயர்ந்து பள்ளங்கள் உருவாகியுள்ளன.
இதன் வழியாக எமனேஸ்வரம், சிவகங்கை, நயினார்கோவில், இளையான்குடி, சென்னை ஊர்களுக்கு செல்லும் வாகனங்கள் இதன் வழியே தான் செல்கின்றன.பாலத்தின் இரண்டு ஓரங்களிலும் மணல் மேடுகளாக உள்ளன.
முக்கிய நெடுஞ்சாலையாக உள்ள இப்பகுதியில் ஏராளமான வாகனங்கள் தினந்தோறும் வந்து செல்கின்றன. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துக்கு உள்ளாகின்றனர்.
பெரும் விபத்துக்கள் ஏற்படுவதற்க்கு முன்பு நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்:பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.