இ
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் நகராட்சிக்கு உட்பட்ட ஆட்டு இறைச்சிகளை கடைகளில் விற்பதற்கு இங்கு ஆடுகள் வெட்டப்பட்டு பின்பு கடைகளுக்கு இறைச்சிகள் எடுத்து செல்லப்படும்.கடந்த சில வருடங்களாக ஆட்டடி கட்டிடம் சிதிலமடைந்து இடியும் நிலையில் உள்ளதால் அங்கு சென்று ஆடுகள் வெட்டப்படுவது இல்லை.
மேலும், பரமக்குடி நகராட்சி ஆட்டடி கட்டிடத்தை குத்தகைக்கு விடப்பட்டுள்ளதால், அனைத்து கடைகளுக்கும் சென்று செயல்படாத ஆட்டடி கட்டிடத்திற்கு பணம் வசூலிக்கப்படுகிறது.
இறைச்சி கடைக்காரர்களில் சிலர் மறைவான இடத்தில் ஆடுகளை வெட்டாமல், சுகாதாரமற்ற நிலையில் ரோடுகளிலே வெட்டுகின்றனர், இதனால் பெரும் சுகாதாரகேடு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.