Home /local-news /

பங்குனி உத்திரம்... காவடி எடுத்து நேர்த்திகடன் செலுத்திய பக்தர்கள்

பங்குனி உத்திரம்... காவடி எடுத்து நேர்த்திகடன் செலுத்திய பக்தர்கள்

பங்குனி

பங்குனி உத்திரம் நேர்த்திகடன்

60வது ஆண்டு பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு ராமேஸ்வரம் பல்வேறு  பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் மேலவாசல் முருகனுக்கு தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர்.

    60வது ஆண்டு பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு ராமேஸ்வரம் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் மேலவாசல் முருகனுக்கு தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

    ராமேஸ்வரம் அகில இந்தியத் யாத்திரை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் அருள்மிகு ராமநாத சுவாமி கோவிலின் உப கோவிலான மேலக் கோபுர வாசலில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ பாலசுப்ரமணியன் சுவாமி கோவில் 60வது ஆண்டு பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு ராமேஸ்வரத்தின்பல்வேறு பகுதிகளில்இருந்து காவடிகள் எடுக்க தொடங்கினர்.

    அதன்படி, அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள், நடராஜபுரம், கெந்தமாதன பர்வதம், ராமகிருஷ்ண மடம், மற்றும் ராமேஸ்வரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து முருகனுக்கு தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு வகையான காவடிகளான பால் காவடி, மயில் காவடி, பறவைக் காவடி,ஓம் காவடி, தேர் காவடி உள்ளிட்ட காவடிகளை எடுத்து வந்து ராமேஸ்வரம் மேற்கு கோபுர வாயிலில் அமைந்துள்ள முருகனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    மேலும், ஏராளமான பொதுமக்களும் மேலவாசல் முருகனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். இந்த 60ஆவது ஆண்டு பங்குனி திருவிழாவை ராமேஸ்வரம் யாத்திரை பணியாளர் சங்கம் சிறப்பான சார்பாக ஏற்பாடுகள் செய்து கொடுத்துள்ளது. ராமேஸ்வரம் மேலவாசல் முருகனுக்கு இரவு 8 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Murugan temple, Ramanathapuram, Temple

    அடுத்த செய்தி