ராமேஸ்வரம் தீவையும் மண்டபம் நிலப்பரப்பையும் இணைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது, பாம்பன் ரயில் பாலம், இந்த பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டு சுமார் 108 ஆண்டுகளை கடந்த போதிலும் தற்போதும் கம்பீரமாக இதில் ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பாம்பன் ரயில் பாலத்தின் உறுதி தன்மை குறித்த ஆய்வுப் பணியை மேற்கொள்வதற்காக மத்திய சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோஜ் அரோரா ராமேஸ்வரத்திருக்கு வந்தார்.
இந்த நிலையில், இன்று காலை ராமேஸ்வரத்திலிருந்து கார் மூலம் புறப்பட்டு பாம்பன் பகுதிக்கு வந்த அவர் பாம்பன் ரயில் நிலையத்திலிருந்து மோட்டார் ட்ராலி மூலம் ரயில் தண்டவாளம் வழியாக ரயில் தண்டவாளம் மற்றும் ரயில் தூக்கு பாலத்தை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது ரயில் தண்டவாளத்தில் உறுதித்தன்மை, தூக்கு பாலத்தின் உறுதித்தன்மை குறித்தும் தூக்கு பாலத்தில் ரயில்கள் செல்லும்போதும் அதிர்வுகள் ஏதும் ஏற்படுகிறதா என்பது குறித்தும், அதேபோல கப்பல்கள் மற்றும் மீன்பிடி படகுகள் தூக்குபாலம் வழியாக செல்லும் போது தூக்கு பாலம் திறப்பதற்கு ஏதுவாக இருக்கின்றனவா என்பது குறித்தும் பாம்பன் தூக்கு பாலத்தை தூக்கியும், இறக்கியும் ஆய்வுகளை மேற்கொண்டார்.
இந்த ஆய்வை மத்திய சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோஜ் அரோரா, ரயில்வே கட்டுமான பிரிவு முதன்மை செயல் அதிகாரி பிரபுல்ல வர்மா, தலைமைப் பொறியாளர் இளம்பூரணன், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் ஆனந்த் ஆகியோர் மேற்கொண்டனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.