இராமேஸ்வரம் அடுத்துள்ள பாம்பன் பூங்கா பகுதி பேருந்து நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்த இடிந்து விழும் நிலையில் உள்ளது.
பாம்பனில் இருந்து மண்டபம் பகுதிக்கு செல்லும் வழியில் பாம்பன்பாலம் இறக்கத்தில் அமைந்துள்ளது இந்த பூங்கா. இந்த பூங்காவின் பேருந்து நிறுத்தத்தின் நிழற்குடையானது சுவர்கள் உடைந்தும் இடிந்து விழும் நிலையில் அபாயகரமாக உள்ளது.
இதுகுறித்து அப்பகுதிவாசி கூறுகையில்:-
இந்த நிழற்குடையானது கடந்த 10 வருடத்திற்கு முன்பு கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. அன்று முதல் இன்று வரை எந்தவொரு பராமரிப்பும் கிடையாது.
இது சேதமடைந்துள்ளதால் பயணிகள் அங்கு செல்வது கிடையாது. வெளியில் நின்றபடியே பேருந்து வந்ததும் பயணிக்கின்றனர் என்று கூறினர். விபரீதம் ஏதும் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
செய்தியாளர்:பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.