ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் குந்துகால் ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கனக்கான ஆன்மீக பக்தர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு பாத்தியப்பட்ட ஏராளமான கோயில்கள் தீவுப்பகுதியில் உள்ளது.
இதில், பாம்பன் குந்துகால் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் கோயிலும் ஒன்று. இக்கோயிலில் கும்பாபிஷேகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், இந்து அறநிலைத்துறை சார்பில் பாம்பன் குந்துகால் ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் கோயில் மறு சீரமைப்பு பணிகள் முழுமையாக நன்கொடையாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் கணபதி ஹோமம் மற்றும் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
காலை 4 மணிக்கு இரண்டாம் கால பூஜை நடைபெற்றது. ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் விக்கிரகத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதன்பின் சிறப்பு தீபாரதணை நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அப்பகுதி கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.