ராமேஸ்வரம் பொந்தம்புளி இறக்கத்திலும் லட்சுமணன் தீர்த்தம் அருகிலும் அமைந்துள்ள புகழ் ரெஸ்டாரண்டில் பிளாஸ்டிக் கவர்களை தவிர்க்க பனையோலைப் பெட்டியில் பிரியாணி வைத்து கொடுக்கப்படுகிறது.
சூடான பிரியாணியை அந்த பனையோலையில் பெட்டிக்குள் வைக்கும்பொழுது பிரியாணியின் சூட்டில் பனைஓலையின் வாசனை முழுவதும் இறங்கி பிரியாணிக்கு புதுவித சுவையைக் கொடுக்கிறது. இதனால் பொதுமக்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது இந்த பனைஓலை பிரியாணி.
இதுகுறித்து உரிமையாளர் தாமோதரன் கூறுகையில்:-
ராமேஸ்வரம் பகுதியை தினந்தோறும் வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில பக்தர்கள் வருகிறார்கள் இதனால் பிளாஸ்டிக் பயன்பாடு அதிக அளவில் உள்ளது. இதனால் பெரும் சுகாதாரகேடு ஏற்படுகிறது. இதை தடுக்கும் விதமாக தான் பனை ஓலை பெட்டியில் பிரியாணி தரும் முறையை பின்பற்றி வருகிறேன்.
எங்கேயும் இல்லாத வித்தியாசமான முறையில் பிரியாணியை பனைஓலையில் வைத்து விற்பனை செய்கிறேன். இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.
நம் முன்னோர்கள் பனை ஓலையில் வைத்து சமைத்து தான் உணவுகள் உட்கொண்டார்கள், அவித்த உணவுகளை உட்கொள்ளும் பொழுது நீண்டநாள் அவர்கள் வாழ்ந்தார்கள் என்றார்.
இந்த பனைஓலை பெட்டிகளை வெளியில் ரூ.17 க்கு வாங்கப்பட்டு அதில் அடைத்து தரப்படும் பிரியாணி ரூ.130 க்கு விற்கப்படுகிறது.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.